தீவன மேலாண்மை
பன்றிகளின் தீவனப் பராமரிப்பு
- பன்றி வளர்ப்பில் தீவன மேலாண்மை இன்றியமையாததாகும். தீவனத்திற்கு ஆகும் செலவு 75 முதல் 80 விழுக்காடு ஆகும். தீவனச் செலவைக் குறைக்க உபயோகப்படுத்துகின்ற தீவனம், மலிவாக, எளிதில் கிடைக்கக்கூடியதாக இருத்தல் வேண்டும்.
- பெரும்பாலும் சமையல் கூடக்கழிவு, உணவு விடுதிக்கழிவுகள், காய்கறி அங்காடி கழிவுகள் ஆகியவற்றை அதிக அளவுக்குப் பயன்படுத்தலாம். இவ்வாறு கொடுப்பவற்றைப் பதப்படுத்திக் கொடுத்தல் நலம்.
- ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பன்றிகளுக்குத் தீனி கொடுத்துக் கொண்டே இருத்தல் வேண்டும்.
- அவ்வப்போது பன்றிகளை பசுந்தீவன மேய்ச்சலுக்கு அனுப்பவேண்டும். இதன் மூலம் தேவையான நார்ச்சத்த அவைகளுக்குக் கிடைக்கும்.
- ஒரு சாதாரணப் பன்றிக்கு நாளொன்றுக்கு 4-8 கிலோ தீனி தேவைப்படும்.
- பன்றிகளுக்குத் தேவையான புரதச் சத்தும், உயிர்ச்சத்தும் கிடைக்கச் செய்ய வேண்டியது அவசியமாகும்.
- குட்டியைத் தாயிடமிருந்து பிரிக்கும் போது தாய்ப்பால் குறைவதால் எடையிழப்பு ஏற்படாமலிருக்க அதற்குப் பதில் பிற தீனிகளை அதிகமாக அளிக்கவேண்டும்.
- மீன், இறைச்சிக் கழிவு போன்ற அதிகப் புரதம் நிறைந்த உணவுகளை அளித்தால் எடை எளிதில் அதிகரிக்கும். பன்றிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களின் அட்டவணை
மலிவான, எளிதில் கிடைக்கக்கூடிய தீவனங்கள்
ஊட்டச்சத்து வகை |
பொலி கிடாப் பன்றிகள் |
குட்டி ஈன்ற பன்றிகள் |
இளம் மற்றும் வயதான ஆண் பன்றிகள் |
உடல் எடை (கிலோ கிராமில்) |
110-250 |
140-250 |
110-250 |
புரதமும், ஆற்றலும் |
|
|
|
|
3.3 |
3.3 |
3.3 |
|
3.17 |
3.17 |
3.17 |
பண்படாத புரதம்
(விழுக்காடு) சதவிகிதம் |
14 |
15 |
14 |
கனிம ஊட்டச்சத்துக்கள் (சதவிகிதம்) |
கால்சியம் |
0.75 |
0.75 |
0.75 |
பாஸ்பரஸ் |
0.5 |
0.5 |
0.5 |
உப்பு |
0.5 |
0.5 |
0.5 |
(ஆதாரம்: வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி)
பன்றிக் குட்டிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள்
ஊட்டச்சத்துக்கள் |
தாயிடமிருந்து பிரிக்கப்பட்டவை |
வளர்ந்து கொண்டிருப்பவை |
வளர்ச்சியடைந்த குட்டிகள் |
உடல் எடை (கிலோகிராமில்) |
5-12 |
12-50 |
50-100 |
தினமும் கிடைக்கக்கூடியது (கிலோகிராமில்) |
0.3 |
0.5 |
0.6 |
புரதமும், ஆற்றலும் |
கலோரி / கிலோகிராம் |
3.5 |
3.5 |
3.3 |
கலோரி / கிலோகிராம் |
3.36 |
3.36 |
3.17 |
பண்படாத புரதம் (சதவிகிதம்) |
22 |
18 |
14 |
கனிம ஊட்டச்சத்துக்கள் |
கால்சியம் |
0.8 |
0.65 |
0.5 |
பாஸ்பரஸ் |
0.6 |
0.5 |
0.4 |
சோடியம் |
- |
0.1 |
- |
குளோரின் |
- |
0.13 |
- |
(ஆதாரம்: வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி)
சமையல் உணவுக் கழிவுகளைத் தீவிர பிற தீவனங்களும் பன்றிக்குக் கொடுக்கலாம். அவை.
தீவனம் |
உட்கொள்ளும் அளவு (சதவிகிதம்) |
மரவள்ளிக்கிழங்குகள் மாவு தயாரிப்பில் வெளிவரும் கழிவு |
15-20 |
இரப்பர் விதைப் புண்ணாக்கு |
15 |
வறுக்கப்பட்ட புளியமர விதைகள் |
20 |
டீத்தூள் கழிவுகள் |
20 |
வீணான இறைச்சிக் கழிவுகள் |
20 |
(ஆதாரம்: கேரள வேளாண்மைப் பல்கலைக்கழகம்)
ஆண் பன்றிக்கு தீவனமளித்தல்
இனக்கலப்பிற்காக வளர்க்கப்படும் ஆண் பன்றிகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு நாளைக்கு 2-2.5 கிலோகிராம் அடர் தீவனம் அளிக்கவேண்டும். 100 கிலோ எடையுள்ள பன்றிக்கு இதை அளிக்கலாம். பன்றிகளை பசுந்தீவன மேய்ச்சலுக்கு அனுப்பினால் நார்ச்சத்து, புரதச்சத்து, கால்சியம், இரும்பு போன்ற ஊட்டச் சத்துக்கள் கிடைக்கச் செய்யலாம்.
பெண் பன்றிகளின் தீவனப் பராமரிப்பு
பெண் பன்றிகளுக்குத் தேவையான புரதச்சத்து மற்றும் உயிர்ச்சத்து அதிக அளவுக்குக் கிடைக்கச் செய்யவேண்டும். புரதத்தில் தேவையான அமினோ அமிலங்கள் இருக்கவேண்டும். மேலும் உயிர்ச்சத்துக்களான ரைபோபியாவின், நையாசின், பாண்டோதெனிக் அமிலம், பி12 மற்றும் உயிர்ச்சத்து ஏ, டி ஆகியவை கண்டிப்பாக கொடுக்கப்படவேண்டும்.ள
நன்கு வளர்ந்த பெண் பன்றிகளில் கன்னிப் பன்றிகள் முதல் முறை சினையாகும் போது 30-35 கிலோவும் அடுத்த இரண்டாவது முறையிலிருந்து சினையான பின்பு 40-45 கிலோவும் கூடுதல் எடையுடன் இருக்கும்.
குட்டி ஈன்ற பன்றிகளுக்குத் தீவனப் பராமரிப்பு
தாய்ப்பன்றிக்கு சிறிது சிறிதாக பசுந்தீவனமும் அடர் தீவனம் அளிக்கவேண்டும். 10 நாட்களுக்குப் பிறகு முழுத்தீவனம் கிடைக்கச் செய்யலாம். நாளொன்றுக்கு 100 கிகி எடையுள்ள பன்றிக்கு 2.5-3 கிலோகிராமும் 0.2 கிலோகிராமும் ஒரு குட்டிப் பன்றிக்கும் அளித்தல் வேண்டும். பன்றிக் குட்டிகளுக்கெனத் தயாரிக்கப்பட்ட சிறப்புத் தீவனமும் கொடுத்தல் வேண்டும்.
குட்டி ஈன்ற பன்றிக்கு தீவனப் பராமரிப்பு
பன்றிக்குட்டித் தீனி
தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட குட்டிகளுக்குத் தாய்ப்பாலுக்குப் பதிலாக அதே அளவு ஊட்டச்சத்துக் கொடுப்பதற்காக தயாரித்து அளிப்பதே இத்தீவனம் ஆகும். இரண்டாவது வாரத்திலிருந்து இத்தீனியை அளிக்கலாம்.நல்ல ஆரோக்கியமான ஒரு குட்டி 8வது வாரத்திற்குள் 10 கி அளவு தீவனம் சாப்பிட்டுவிடும். இதில் 3ல் இரண்டு பங்கு தீனி 6-8 வாரங்களுக்குள் எடுத்துக் கொள்ளும்.
வளரும் பன்றிகளுக்கான தீவனம்
வளரும் பன்றிக்குட்டிகள் 6 மாதத்திற்குள் நல்ல உடல் எடையை அடைய அதற்கு நிறைய தீனிக் கொடுத்தல் அவசியம். கொடுக்கும் தீனியை மூன்று பாகங்களாகப் பங்கிட்டு சற்று இடைவெளியுடன் கொடுத்தல் நலம். ஒரு கிலோ எடை பெறுவதற்கு பன்றிக்கு 0.4 கிலோ தீனி தேவைப்படுகிறது. எனவே கழிவுகள் கொழுப்பு நிறைந்த தீனிகளை அளிக்கலாம். (புரோட்டீன்) புரதம் குறைந்தளவே போதுமானது.
(ஆதாரம்: கேரள வேளாண்மைப் பல்கலைக்கழகம்)
வளரும் பன்றிகளின் அளவையும் (எடையையும்) வயதையும் வைத்து அவற்றை ஒரே கொட்டிலில் அடைக்கலாம். எடை அதிகம் வித்தியாசப்பட்டால் வேறு கொட்டிலுக்கு மாற்றிவிடவேண்டும். ஒரே கொட்டிலில் இருக்கும் பன்றிகளின் எடை 20 சதவிகிதம் மேல் வேறுபட்டு இருக்கக்கூடாது. 15 குட்டிகள் வரை ஒரு கொட்டிலில் அடைக்கலாம், கோடைக்காலங்களில் கழுவி விடுதல், நீரைப் பன்றிகள் மீதுதெளித்தல் போன்ற செயல்கள் மூலம் அவற்றைக் குளிரச் செய்யலாம்.
தாய்ப்பன்றிகளிடமிருந்து குட்டிகள் பிரிக்கப்பட்டதிலிருந்து (9-10 கிலோகிராம்) அவை இறைச்சிக்காக வெட்டுவதற்கு அனுப்பப்படும் வரை அவற்றிற்கு முறையான தீனி அளித்தல் அவசியம். காயடித்தல் செய்தால் விலங்குகள் அமைதியாக இருப்பதோடு எடை விரைவில் கூடுவதற்கும் வாய்ப்புள்ளது.
குட்டி பிறந்த 3-6 வாரங்களுக்குள் காயடித்து விடுதல் வேண்டும். வளர்ச்சியில்லாத குட்டிகளை முன்னமே கண்டறிந்து அவற்றைப் பண்ணையிலிருந்து நீக்கிவிடவேண்டும். தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட 2 வாரங்களுக்குப் பின் குடற்புழு நீக்க மருந்த அளிக்கவேண்டும். பின்பு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இம்மருந்தை அளித்தல் குடற்புழுத் தொல்லையிலிருந்து பன்றிகளைப் பாதுகாக்க உதவும்.
அனாதைக் குட்டிகள்
குட்டி ஈன்றபின் தாய்ப்பன்றி இறந்து விட்டாலோ, பால் சரியாகக் சுரக்காவிட்டாலோ அல்லது குட்டியை அது ஏற்றுக்கொள்ளாவிட்டாலோ குட்டி அநாதை ஆகும். இவ்வாறு பால் கிடைக்காத குட்டிகளுக்குப் பிற தாய்ப்பன்றியிடம் சேர்த்து விடுதல் வேண்டும். பன்றிகள் பிற பன்றியின் குட்டியை எளிதில் ஏற்றுக் கொள்ளாது. எனவே அவற்றுக்கு செவிலித்தாய்ப் பன்றியின் வாசத்தைப் பரப்பவேண்டும். அப்போது தான் செவிலித்தாயாக இருக்கும் பன்றி குட்டியை ஏற்றுக் கொள்ளும். இவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படாத குட்டிகளுக்கு மாட்டுப்பால் கொடுக்கலாம். ஒரு பன்றிக் குட்டிக்கு நாளொன்றுக்கு 300-500 மிலி பால் தேவைப்படுகிறது. குட்டிகள் இப்பாலை குடித்துப் பழகும் வரை ஒரு நாளில் 5-6 முறை அருந்தச் செய்யலாம். அவ்வப்போது விட்டமின் மற்றும் இரும்புச் சத்துள்ள 'இம்ஃபெரான்' போன்ற தாதுக்களை ஊசி மூலம் செலுத்தினால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படாமல் குட்டிகளைக் காக்கலாம்.
நல்ல பராமரிப்பில் வயதிற்கேற்ப இருக்க வேண்டிய எடை
வயதிற்கேற்ப |
வயதிற்கேற்ப |
4 |
4 |
8 |
10 |
12 |
20 |
20 |
50 |
28 |
85 |
நாளொன்றுக்குத் தேவையான நீரின் அளவு (தோராயமாக)
வயது / வயது பிரிவு (வாரங்களில்) |
தண்ணீர் தேவை (லிட்டரில்) |
8 |
3 |
20 |
7 |
28 |
8 |
சினைப்பன்றி |
|
முதல் 3 மாதங்கள் |
12 |
கடைசி 3 மாதங்கள் |
15 |
5-8 குட்டிகள் ஈன்ற பாலூட்டும் பன்றி |
25 |
10-12 குட்டிகள் ஈன்ற பாலூட்டும் பன்றி |
30 |
ஆண் பன்றி |
20 |
(ஆதாரம்: கேரள வேளாண்மைப் பல்கலைக்கழகம்)
|